செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (15:46 IST)

கோவில்கள் எல்லா நாளும் திறக்கலாம்; அரசு அனுமதி! – கொண்டாட்டத்தில் பக்தர்கள்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களில் கோவில்கள் திறக்க தடை இருந்த நிலையில் தற்போது முழுவதுமாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில்களை எல்லா நாளும் திறந்து வைக்க வேண்டும் என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு இனி கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களும் உட்பட வார நாட்கள் முழுவதும் திறந்திருக்க அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல மழலையர் பள்ளி, அங்கன்வாடிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.