1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. trump said america going to stop fund to israel

இனிமே இஸ்ரேலுக்கு நிதி கொடுக்கமாட்டேன் - டொனால்ட் டிரம்ப் உறுதி

donald netanyagu
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கிய போது அமெரிக்காவுடன் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கியது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேல் தாக்குதலில்தான் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

ஒருபக்கம் காசா உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேல் கடுமையான போரை நடத்தியது. இதன் காரணமாக காசாவில் அப்பாவி பொதுமக்களும் குழந்தைகளும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உலக நாடுகளின் எதிர்ப்பை இஸ்ரேல் பெற்றது.

இந்நிலையில் அமெரிக்க சார்பில் இஸ்ரேலுக்கு வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் சுமார் ரூ.33,000 கோடி ராணுவ நிதியை இந்த வருடத்துடன் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியாக வலுவடைந்து விட்டதால் அமெரிக்காவின் நிதி அந்த நாட்டுக்கு தேவை இல்லை எனவும் ஆயுத விற்பனை தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு ரகசிய உதவி.. இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்த டிரம்ப்...