டிரம்பின் ஆட்டத்தை காலி செய்த இடைத்தேர்தல் - இனிமே அடக்கி வாசிப்பாரா?...
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கீழவை பிரதிநிதிகள் சபையின் 435 இடங்கள் மற்றும் மேலவை சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 35 இடங்களில் ஆளுநரை தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடந்தது.
பிரதிநிதிகள் எனப்படும் கீழவை மற்றும் செனட் எனப்படும் மேலவை ஆகிய இரண்டையும் கோட்டை விட்டு அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. 436 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 187 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை. ஆனால், ஜனநாயக கட்சி 51 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டது. டிரம்பின் குடியரசு கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பின் தீவிர வரி விதிப்புகள், ஈரான் உடனான போர் காரணமாக அமெரிக்காவில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் அமெரிக்க மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால்தான் இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னால் அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் 100 சதவீத வரிகளை விதிக்கும் மசோதாவை சமீபத்தில் அவர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
ஒரு பக்கம் ஈரான் மீது போரை தொடங்கினார். அதில் அமெரிக்காவுக்கு பல கோடி லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி டிரம்ப் கவலைப்படவில்லை. தற்போது இடைக்கால தேர்தல் முடிவுகளின் படி செண்ட சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியதன் மூலம் இனிமேல் அரசின் திட்டங்கள், நிர்வாக முடிவுகள், செலவீனங்களை டிரம்ப் தன்னிச்சையாக செய்ய முடியாது.. அவற்றை எதிர்க்கவும், கண்காணிக்கவும் ஜனநாயக கட்சியால் முடியும். அதுமட்டுமின்றி அதிபரின் முக்கிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.
எனவே இனிமேல் டிரம்ப் அடக்கி வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.