தேர்தல் தோல்விக்கு ஈரான் போரில் அமெரிக்கா தலையிட்டது தான் காரணம்: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிபர் டெனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலுமே எதிர்த்தரப்பான ஜனநாயக கட்சி பெரும்பான்மை பெற்று முன்னணியில் உள்ளது.
இந்த தேர்தல் தோல்வி குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். வாக்காளர்களின் வருகைப்பதிவில் எவ்வித குறைபாடும் இல்லை என்றும், கடந்த 2024 தேர்தலில் டிரம்ப் மற்றும் வான்ஸுக்கு வாக்களித்த ஆதரவாளர்களே தற்போது குடியரசு கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதே இத்தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களை மீண்டும் குடியரசுக் கட்சி பக்கம் ஈர்க்க நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்:
போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
'அமெரிக்காவிற்கே முதலிடம்' என்ற கொள்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் இருந்தே ஈரான் போருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜே.டி. வான்ஸ், இந்த 4 முக்கிய காரணங்களாலேயே தங்களது ஆதரவாளர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

