1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump accepted the iran war is the reason

ஒத்துக்குறேன்.. இதுதான் தோல்விக்கு காரணம்.. ஆனாலும் ஃபீல் பண்ணமாட்டேன் - அடங்காத டிரம்ப்...

donald trump
அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை மற்றும் ஆளுநர்களை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசு கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. இதையடுத்து ஈரான் போர்தான் இதற்கு முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்பு கொண்டிருக்கிறார்.

விலைவாசி உயர்ந்ததால் மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.. அதுவே தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.. இருப்பினும் நீண்ட கால பாதுகாப்பை பெறுவதற்காக எடுத்த அந்த முடிவில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என டிரம்ப் கூறியிருக்கிறார்.

ஈரானுக்கு எதிரான போரை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.. அதை தொடர்ந்து செய்வோம் எனவும் அவர் கூறினார். அதிபராக சிறப்பாக செயல்படுவதால் தம் பதவி நீக்கம் செய்யப்பட எந்த காரணமும் இல்லை.. அதுபற்றி கவலையும் இல்லை எனவும் இடைக்காலத் தேர்தல் வெற்றியால் ஜனநாயக கட்சியினர் அந்த முயற்சியில் ஈடுபட்டால் அது அந்த கட்சிக்கு அழிவை தேடி தரும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பள்ளிக்கல்வித்துறையை அடுத்து உயர்கல்வித்துறையில் விசாரணை: அமைச்சர் மரிய வில்சன்...