1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. elan musk spent 1900 crores for failed candidates

எலன் மஸ்க் ரூ.1900 கோடி செலவு பண்ணியும் தோத்துப்போன வேட்பாளர்...

elan musk
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்த நிலையில் பிரதிநிதிகள் எனப்படும் கீழவை மற்றும் செனட் எனப்படும் மேலவை ஆகிய இரண்டையும் கோட்டை விட்டு அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.

436 இடங்களை கொண்ட பிரதிநிதிகள் சபையில் 187 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றிய நிலையில், டிரம்பின் குடியரசுக் கட்சி 110 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 100 இடங்களை கொண்ட செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை. ஆனால், ஜனநாயக கட்சி 51 இடங்களில் வெற்றிபெற்றுவிட்டது. டிரம்பின் குடியரசு கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றது.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், டிரம்பின் ஆதரவாளரான அமெரிக்கா தொழிலதிபர் எலன் மஸ்க்கின் பணபலத்தையும் மீறி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தாலரிகோ டெக்சாஸ் செனட் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியின் கென் பாக்ஸ்டனை ஜெயிக்க வைக்க, தேர்தல் பிரச்சாரங்களுக்காக எலன் மஸ்க் சுமார் ரூ.1900 கோடி பணத்தை வாரி இறைந்திருந்ந்தார். ஆனால், அவர் வெற்றிபெறவில்லை.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மதுரை - தூத்துக்குடி இரட்டை அகல ரயில் பாதை: நிலம் கையகப்படுத்த அதிரடி கெஜட்!