1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Likely in 14 Tamil Nadu Districts Today, Weather Department Alerts

இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று  14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.   மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. 
 
மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
திருப்பரங்குன்றம் வழக்கு.. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதில் என்ன பிரச்சனை? நீதிபதி கேள்வி....