1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Shift and Welfare Rules for TASMAC Staff from December 1

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை.. வார விடுமுறை.. அதிரடி அறிவிப்பு...

vijay tasmac
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கான பணிச்சீரமைப்பு மற்றும் நலத்திட்டங்களை டிசம்பர் 1, முதல் அமல்படுத்த நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இனி பணியாளர்களுக்கு 8 மணி நேர வேலை மட்டுமே இருக்கும்; காலை 10 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் கடைகளில் மூன்று ஷிப்ட் முறையில் பணி அமர்த்தப்படுவர். மேற்பார்வையாளர்களுக்கும் 8 மணி நேர வேலை வரம்பு பொருந்தும்.
 
ஒவ்வொரு பணியாளருக்கும் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மேலும் மாதத்திற்கு 2 மணி நேர அனுமதியும் உண்டு. விடுப்புகள் மற்றும் பிற கோரிக்கைகளுக்கு கை கருவி மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
 
பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு தலா ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும்; இது 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்படும். மருத்துவ செலவுத்தொகைக்கும் கை கருவி மூலம் விண்ணப்பித்துப் பெறலாம். குழு காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
இனி பள்ளிகள் அருகில் போதைப்பொருள் விற்க முடியாது.. தவெக அரசின் அதிரடி உத்தரவு...