1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. World Cup echo Ahalabad accommodation rent hike

உலகக் கோப்பை எதிரொலி: அலகாபாத்தில் தங்கும் அறைகளின் வாடகை உயர்வு!

Icc World cup 2023
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டியையொட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது.

அதேபோல், விமான டிக்கெட்டுகளின் விலையும் உயர்ந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வாடகையுள்ள விடுதி அறைகள் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரத்திற்கும், ரூ.35 ஆயிரம் – ரூ.50 ஆயிரம் வாடகையுள்ள அறைகள் ரூ.1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மேலும், டெல்லி- அகமதாபாத் செல்லும் விமானங்களின் கட்டணம் 400% அதிகரித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
அண்ணா பல்கலை கட்டண உயர்வு, பொன்முடியின் விளக்கம் ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி