ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (16:38 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் கேப்டன்

Suryakumar Yadav
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் சூர்யகுமார் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் உள்ளது. தற்போது இந்தியாவில்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்
நியூசிலாந்தை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 3 வதுமுறையாக உலகக் கோப்பை வெல்லும் என இந்தியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர், இந்திய
அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர்
நடைபெறவுள்ளது.
 
இத்தொடரில் சூர்யகுமார் செயல்படுவார் எனவும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில்
இருந்து ஹர்த்திக் பாண்ட்யா குணமடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால்
கிரிக்கெட் வாரியம் இந்த முடிவு எடுத்துள்ளது. இத்தொடர் வரும் நவம்பர் 23 -டிசம்பர் 3
வரை இந்தியாவில் இத்தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.