வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (20:52 IST)

முகமது ஷமி: விவசாயி மகன் தடைகளை உடைத்து உலகக் கோப்பையில் சாதித்தது எப்படி?

“நிலைத்தன்மைதான் கிரிக்கெட்டின் வெற்றிக்கும், வாழ்க்கையின் வெற்றிக்கும் முக்கியமானது.”
 
இந்த வார்த்தையைக் கூறியது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு போர்க்குதிரை முகமது ஷமி. நிலைத்தன்மை என்ற வார்த்தைக்கு உதாரணமாகத் தனது பந்துவீச்சை வைத்திருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள்.
 
உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, மேற்கு வங்கத்துக்காக விளையாடி, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி.
 
உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முகமது ஷமியின் பந்துவீச்சு முக்கியமானது. அதிலும் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஷமியின் துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்குத் திருப்புமுனையாக இருந்தது.
 
 
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆடடத்தில் அந்த அணி கேப்டன் வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி, ஷமி உலகக் கோப்பையில் 50-வது விக்கெட்டை எட்டி சாதனை படைத்தார்.
 
உலகக்கோப்பையில் தனது 17வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
 
 
உத்தர பிரதேசத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, மேற்கு வங்கத்துக்காக விளையாடி, இன்று இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார் முகமது ஷமி.
 
கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும்பாலும் இதுவரை தெரிந்திராத தகவல் என்னவென்றால் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அளவில் பேட்டர்களை போல்ட் மூலம் விக்கெட் எடுத்தவர்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் இருவர் மட்டுமே இருந்தனர், அவர்களோடு முகமது ஷமியும் இணைந்துள்ளார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
அது மட்டுமல்லாமல் உலகக்கோப்பையில் குறைந்த இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜாகீர் கான், ஜவஹல் ஸ்ரீநாத் இருவரும் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
 
இருவரையும் முறியடித்து ஷமி 45 விக்கெட்டுகள் மைல் கல்லை எட்டினார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை ஷமி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.
 
 
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை ஷமி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் இருக்கிறார்.
 
உத்தர பிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் சதாஸ்பூர் என்னும் கடைக்கோடி கிராமத்தில் 1990, செப்டம்பர் 3ஆம் தேதி பிறந்தவர் முகமது ஷமி. ஷமி உடன் பிறந்தோர் மொத்தம் 5 பேர், இதில் இவர் கடைசி நபர்.
 
ஷமியின் தந்தை தவுஷீப் அலி ஒரு விவசாயி. இவரும் தனது இளமைக் காலத்தில் கிரிக்கெட் வீரராக விரும்பி, வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால், குடும்ப சூழல் காரணமாக, விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாவிட்டாலும் தனது மகனை(ஷமி) கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என தவுஷீப் அலி விரும்பினார். முகமது ஷமிக்கு 15 வயது ஆனபோது, சொந்த கிராமத்தில் இருந்து 22 கி.மீ தொலைவில் இருக்கும், மொராதாபாத் நகரில் கிரிக்கெட் பயிற்சிக்கு தவுஷீப் அழைத்துச் சென்றார்.
 
சிறுவயதில் முகமது ஷமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தபோது, அவருக்கு பந்துவீச்சு திறமை இருப்பதை பயிற்சியாளர் பத்ரூதீன் சித்திக் கண்டரிந்தார்.
 
 
சிறுவயதில் முகமது ஷமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தபோது, அவருக்கு பந்துவீச்சு திறமை இருப்பதை பயிற்சியாளர் பத்ரூதீன் சித்திக் கண்டரிந்தார்.
 
ஷமியின் பந்துவீச்சுத் திறமை குறித்து பத்ரூதீன் சித்திக், “15 வயதில் ஷமி வலைப்பயிற்சியில் பந்துவீசும்போது, அவரின் பந்துவீச்சை முதன்முதலில் பார்த்தேன். அப்போதே இவர் சாதாரண ஆள் இல்லை என நினைத்து தனிக் கவனம் செலுத்தி பயிற்சி அளித்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
உத்தர பிரதேச அணிக்காக ஷமியை ஓர் ஆண்டு தயார் செய்த அவர், "ஷமி கடினமாக பயிற்சி எடுத்தார், பயிற்சிகளுக்கு நன்கு ஒத்துழைத்தார்" என்றும் தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வில் ஷமி சிறப்பாகப் பந்து வீசியும், சில அரசியல் காரணங்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் பத்ரூதீன் சித்திக் தெரிவித்தார்.
 
"அடுத்த ஆண்டு மீண்டும் அழைத்து வாருங்கள் என்று என்னிடம் ஷமி கூறினார். ஆனால், ஷமியின் வாழ்க்கையில் ஓர் ஆண்டை வீணாக்க நான் விரும்பாததால், அவரை கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்ல பெற்றோரிடம் அறிவுறுத்தினேன்,” எனத் தெரிவித்தார்.
 
முகமது ஷமி சிறு வயதில் இருந்தே பந்துவீச்சில் ஆர்வமுள்ளவர். தேய்ந்த பந்துகள் மூலம் எவ்வாறு ரிவர்ஸ் ஸ்விங் செய்வது, கட்டர்களை எவ்வாறு வீசுவது என்று தானாக பந்துவீசி பயிற்சி எடுத்து வந்தார்.
 
 
 
கொல்கத்தாவுக்கு சென்ற முகமது ஷமி டல்ஹவுசி அத்லடிக் கிளப்பில் சிறிது காலம் விளையாடினார். ஷமியின் பந்துவீச்சைப் பார்த்த பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் துணைச் செயலாளர் தேபாரதா தாஸ் அவரைth தனது சொந்த கிளப்பான டவுன் கிளப்பில் சேர்த்தார். கொல்கத்தாவில் தங்குவதற்கு ஷமிக்கு இடமிளித்து, ரூ.75 ஆயிரம் ஒப்பந்தத்தில், தினசரி சாப்பாட்டுக்கு ரூ.100 வழங்கி ஒப்பந்தம் செய்தார்.
 
முகமது ஷமியின் பந்துவீச்சைப் பார்த்த தேபாராத தாஸ், மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சம்பரன் பானர்ஜியை அழைத்து ஷமியின் பந்துவீச்சைப் பார்வையிட வைத்தார். இதுதான் ஷமி வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து, பெங்கால் அணியில் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஷமி சேர்க்கப்பட்டார்.
 
முகமது ஷமி குறித்து தேவ்பாரதா தாஸ் ஒருமுறை கூறுகையில், “ஷமிக்கு ஒருபோதும் பணத்தின் மீது பற்று இல்லை. அவரின் இலக்கு ஸ்டெம்புதான். ஸ்டெம்பை பந்து சாய்க்கும்போது வரும் சத்தம்தான் அவருக்குப் பிடிக்கும்.
 
ஷமியின் பந்துவீச்சில் பெரும்பாலும் பேட்டர்கள் போல்ட் முறையில்தான் ஆட்டமிழந்தனர். அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பிற்கு வெளியே பந்துவீசி, லேசான இன்கட்டர்களை வீசி, பேட்டர்களை ஷமி திணற விடுகிறார்,” எனத் தெரிவித்துள்ளார்.
 
டவுன் கிளப்பில் இருந்து பின்னர் புகழ்பெற்ற மோகுன் பாகன் கிரிக்கெட் கிளப்பில் முகமது ஷமி சேர்ந்து விளையாடினார். ஒருமுறை ஈடன் கார்டன் மைதானத்தில் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு ஷமி பந்து வீசினார்.
 
இரு பந்துகள் பவுன்ஸராக வீசிப்பட்டவுடன், ஆடுகளத்தில் ஏதேனும் கோளாறு இருக்கிறது என்று நினைத்த கங்குலி தனது பேட்டால் ஆடுகளத்தைத் தட்டி சரிசெய்தார். ஆனால், அதன் பின்னும் ஷமி வீசிய பந்துகள் பவுன்ஸராக வரவே கங்குலி தனது பேட்டிங்கை நிறுத்திவிட்டு ஷமியை அழைத்து பந்துவீச்சு குறித்து விசாரித்தார்.
 
அதன்பின் தன்னால் மேற்கு வங்க ரஞ்சி அணிக்குள் செல்ல முடியவில்லை என்று ஷமி, கங்குலியிடம் தெரிவித்தார். இதையடுத்து சௌரவ் கங்குலியின் பரிந்துரையில், மேற்கு வங்க ரஞ்சிக் கோப்பை அணியில் ப்ளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெற்று 2010-11ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாடினார்.
 
முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முதன்முதலில் ஒளி ஏற்றி வைத்து, மற்றவர்கள் பார்வையில் தெரிய வைத்தவர் கங்குலி என்றால் மிகையல்ல. கங்குலி கேப்டன்சியில் இந்திய அணியில் செதுக்கப்பட்டு, வார்க்கப்பட்டவர்களில் முகமது ஷமியும் ஒருவர்.
 
அதன்பின் பெங்கால் அணிக்காக டி20 போட்டி, முதல்தரப் போட்டிகளில் பங்கேற்ற முகமது ஷமி தனது வேகப்பந்துவீச்சால் முத்திரைப் பதிக்கத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டில் நடந்த துலீப் கோப்பையை கிழக்கு மண்டலம் வெல்வதில் ஷமியின் பந்துவீச்சு முக்கியப் பங்களிப்பு செய்தது.
 
அதன்பின் இந்திய ஏ அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஷமி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்நாட்டில் இருக்கும் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால் ஷமியின் பந்துவீச்சுக்கு அந்த மைதான்தில் அனல் பறந்தது.
 
ஷமியின் பந்துவீச்சில் இருக்கும் நிலைத்தன்மை, லைன் லென்த், துல்லியத்தைப் பார்த்து இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் மெய்சிலிர்த்தார்.
 
 
பாகிஸ்தானுக்கு எதிராக 2013ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒருநாள் போட்டியில்தான் முகமது ஷமி முதன்முதலில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார்.
 
2012-13ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் ஷமி 28 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 18 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை ஷமி சாய்த்து பிரமிக்க வைத்தார்.
 
இதையடுத்து, இந்திய அணியின் கதவை ஷமி தட்டாமல் அவரது திறமை தானாகவே திறக்க வைத்தது. 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி அறிமுகமானார்.
 
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷமி தனது ரிவர்ஸ் ஸ்விங், இன்ஸ்விங், கட்டர்கள் மூலம் மேற்கிந்திந்திய பேட்டர்களை திணறவிட்டு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு டெஸ்ட்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பாகிஸ்தானுக்கு எதிராக 2013ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒருநாள் போட்டியில்தான் முகமது ஷமி முதன்முதலில் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே ஷமி 9 ஓவர்கள் வீசி 4 மெய்டன்கள், 23 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஒருநாள் அறிமுகப் போட்டியில் 4 மெய்டன் வீசிய புதிய இந்திய பந்துவீச்சாளராக ஷமி முத்திரை படைத்தார்.
 
 
கடந்த 2013ஆம் ஆண்டு முதன்முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் முகமது ஷமி வாங்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை என்பதால், 2014ஆம் ஆண்டு ஷமியை டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கி 5 ஆண்டுகள் தக்க வைத்தது.
 
அதன்பின் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் 3 சீசன்கள், குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 சீசன்களாக ஷமி விளையாடி வருகிறார்.
 
முகமது ஷமி ஐபிஎல் அணிக்குள் வந்ததே சுவரஸ்யமானது. அது குறித்து கேகேஆர் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் கூறுகையில், “ஷமியின் பந்துவீச்சு முறையை ஒருமுறை வாசிம் அக்ரம் பார்த்தார். இதையடுத்து, அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேருங்கள் என்று கூறி ஏலத்தில் எடுக்க வைத்தார். வாசிம் அக்ரமையே ஷமி தனது பந்துவீச்சால் கவர்ந்துவிட்டார். ஷமியிடம் சிறப்பான திறமை இருக்கிறது என்று வாசிம் பாய் நம்பினார்,” எனக் குறிப்பிட்டார்.
 
எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்பு தந்த புகைப்படத்தை எடுத்தவரின் 3 லட்சம் நெகட்டிவ்கள் என்ன ஆயின?
 
2012ஆம் ஆண்டில் நடந்த துலீப் டிராபி கோப்பையை கிழக்கு மண்டலம் வெல்வதற்கு ஷமியின் பந்துவீச்சு முக்கியப் பங்களிப்பு செய்தது.
 
ஐ.பி.எல் தொடரில் ஷமி விளையாடியபோதுதான் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் விதி விளையாடியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷமி இருந்தபோது அந்த அணியில் சீர் லீடராக இருந்த, ஹசன் ஜஹான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். இதையடுத்து இருவரும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தையும் பிறந்தது.
 
ஆனால், திருமண வாழ்க்கை ஷமிக்கு சில ஆண்டுகள் மட்டுமே இனித்தது. அதன்பின் மனைவி ஜஹானுக்கும், ஷமிக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டது. ஷமி மீது குடும்ப வன்முறை புகாரையும் அளித்த ஜஹான், ஷமி 2018ஆம் ஆண்டில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
ஆனால், ஷமியின் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்த பிசிசிஐ, இந்தப் புகார் குறித்து விசாரிக்க தனிக்குழுவை அமைத்தது. தேசிய ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்தது. பிசிசிஐ ஊழல் விசாரிப்புக் குழு முன் ஆஜராகி ஷமியும் விளக்கம் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த பிசிசிஐ அமைத்த குழு, ஜஹானின் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனத் தெரிவித்தது, இதன்பின், ஷமியின் தேசிய ஒப்பந்தமும் மீண்டும் வழங்கப்பட்டது.
 
அது மட்டுமல்லாமல் ஷமி சட்டரீதியாக இந்தப் புகாரை அனுகினார். தனது மனைவி ஜஹான் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து திருமணம் செய்தார் என்று புகார் அளித்தார். கணவன், மனைவி இருவரும் மாறி, மாறி வழக்குத் தொடர்ந்ததால், பெரிய குழப்பம் ஏற்பட்டது.
 
சியரா மாட்ரே: துருப்பிடித்த கப்பலை கொண்டு சீனாவுக்கு சவால் விடும் பிலிப்பைன்ஸ் - எப்படி தெரியுமா?
 
ஷமியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வரவும் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் முக்கியக் காரணமாக இருந்தனர்.
 
இந்த வழக்கு விசாரணை, குற்றச்சாட்டு ஆகியவற்றால் சமூகத்தில் பெரிய அழுத்தத்தை முகமது ஷமி சந்தித்து, மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். ஷமி பலமுறை தனது வீட்டிலிருந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது குடும்பத்தினர், நண்பர்களின் பாதுகாப்பால், கவனிப்பால் அதிலிருந்து தப்பித்ததாகவும் ஒருமுறை ரோஹித் சர்மாவிடம் இன்ஸ்டாகிராமில் ஷமி தெரிவித்திருந்தார்.
 
முகமது ஷமி பெரிய மன உளைச்சலில் இருந்து மீளவும், அவரை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வரவும் அப்போது கேப்டனாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் முக்கியக் காரணமாக இருந்தனர். சமூக ஊடகத்தில் ஷமிக்கு எதிராக வெறுப்புப் பிரசாரங்கள் எழுந்தபோதுகூட அவருக்குத் துணையாக விராட் கோலி, ரோஹித் துணையாக இருந்தனர்.
 
முகமது ஷமி ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “நான் இருந்த மன உளைச்சலில், நாங்கள் தங்கியிருந்த 24வது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று என் குடும்பத்தார் அஞ்சினர்,” எனத் தெரிவித்திருந்தார்.
 
ஷமியின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அவரது வாழ்க்கையிம் இருண்ட பக்கங்களாக மாறிவிட்டன. இதனால் மனம் நொந்திருந்த ஷமியை அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆற்றுப்படுத்தி, மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த நம்பிக்கையூட்டினர். இதையடுத்து, ஓர் ஆண்டுக்காலம் டேராடூனில் தீவிர கிரிக்கெட் பயிற்சி எடுத்த ஷமி மீண்டும் அணிக்குள் வந்தார்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின்போது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தால் ஏறக்குறைய 18 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து, பின்னர் அணிக்குத் திரும்பினார் ஷமி. இந்த 18 மாத காலங்கள் மிகுந்த வேதனையான காலம் என்று ஷமி ஒரு நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
 
ராஜராஜ சோழன் சதயவிழா: தமிழ்நாடு 1,000 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடுவது ஏன்?
 
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி படைத்தார்.
 
அதன்பின் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணம், 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2021, 2022 டி20 உலகக்கோப்பைகள், ஆசியக் கோப்பை என ஷமி முத்திரை பதித்தார்.
 
கடந்த 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணித்தின்போதுதான், ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 56 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று இர்ஃபான் பதான் சாதனையை(59) முறியடித்தார்.
 
அதே ஆண்டில், உலகக்கோப்பைத் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி படைத்தார். மிகக் குறைவாக 80 இன்னிங்ஸில் 150 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக ஷமி ஜொலித்தார்.
 
ஆனைமலையில் மின்மினி பூச்சிகளின் ஒத்திசைவு நடனத்தை இவர் படமெடுத்தது எப்படி?
 
தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்திய ஷமி, தற்போது, லைன் லென்த்தில் மட்டுமே தீவிரம் காட்டுகிறார்.
 
சர்வதேச அணிகளுக்கும், பேட்டர்களுக்கும் சிம்மசொப்னமாக ஷமி இருக்கக் காரணம் அவரின் தனித்துவமான பந்துவீச்சும், பந்துவீச்சு ஸ்டெயிலும்தான். வலதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷமி எப்போதுமே சராசரியாக 140 கி.மீ வேகத்தில் வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
 
பந்தின் சீமிங்(தையல்) பிடித்து, நேராக லைன் லென்த்தில் பிட்ச் செய்து, அதை இன்கட்டராகவும், அவுட் ஸ்விங்காகவும் மாற்றுவதில் ஷமி வல்லவர். பந்தை இன்ஸ்விங்காகவும், ரிவர்ஸ் ஸ்விங்காகவும் வீசுவதிலும் ஷமி கைதேர்ந்தவர்.
 
ஷமியின் பந்துவீச்சு நேர்த்தியாக இருக்க முக்கியக் காரணம், அவர் பந்துவீசும்போது, அவரின் மணிக்கட்டு கடுமையாக வளையாமல் மிகவும் லேசாகவே ஸ்விங் செய்வதுதான்.
 
தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்திய ஷமி, தற்போது, லைன் லென்த்தில் மட்டுமே தீவிரம் காட்டுகிறார். ஏற்கெனவே ஸ்விங் செய்வதில் வல்லவரான ஷமி, லைன் லென்த்தில் வீசும்போது, எவ்வளவு பெரிய பேட்டராக இருந்தாலும், அதை பெரிய ஷாட்டாக மாற்றத் திணறுவார்கள்.
 
பந்து தேய்ந்த பின் அதை ரிவர்ஸ் ஸ்விங் செய்வது, சில நேரங்களில் எவ்வளவு பெரிய பேட்டர்களாலும் எதிர்கொள்ள முடியாததாக ஆகிவிடுகிறது. ஷமியின் பந்துவீச்சு வெற்றிக்கு அவரின் ஸ்விங் செய்யும் முறையும், ரிவர்ஸ் ஸ்விங்கும், லைன் லென்த்தில் வீசும் நிலைத்தன்மையும் முக்கியக் காரணம்.
 
அது மட்டுமல்லாமல் பேட்டர்கள் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று யார்க்கர்களை காலுக்குக் கீழே இறக்கி அவர்களை நிலைகுலையச் செய்வதிலும் ஷமி வல்லவர். அதிலும் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சற்று விலக்கி வீசி, பந்து பிட்ச் ஆனதும் லேசாக இன்கட்டராக உள்ளே வரும்போது, அதை அடிக்க பேட்டர்கள் முயலும்போது பேட்டில் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்ட் ஆக்குவது நுணுக்கமான உத்தி.
 
சமீபத்தில் இங்கிலாந்து பேட்டர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததும் இதுபோன்ற உத்தியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் ஷமியின் பந்துவீச்சு குறித்துக் கூறுகையில், “நீங்கள் சரியான லைன் லென்த்தில் பந்துவீசி, பேட்டர்களுக்கு தொந்தரவு கொடுத்தால், அவர்களுக்கு மேலும், மேலும் அழுத்தம் அதிகரிக்கும். இந்த அழுத்தம் அவர்களைத் தவறு செய்யத் தூண்டும். இதுதான் ஷமியின் உண்மையான பலம்,” எனத் தெரிவித்தார்.
 
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், “எந்த ஆடுகளமாக இருந்தாலும் ஷமி உடனே தன்னை தகவமைத்துக் கொள்வார். தனது லைன் லென்த்தையும் மாற்றிவிடுவார். எந்த ஆடுகளத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும், எங்கே பிட்ச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து, சரியான இடத்தில் பிட்ச் செய்யக்கூடியவர்,” எனத் தெரிவித்தார்.
 
ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “கபில்தேவுக்கு பிறகு எப்போதுமே வலைப்பயிற்சியில் பந்துவீச்சுக்காக செலவிடும் ஒரே பந்துவீச்சாளராக முகமது ஷமியை பார்க்கிறேன்,” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
வீரப்பன்: கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? ராஜ்குமாரை விடுவிக்க காவிரி நீர் கேட்க காரணம் யார்?
 
ரிவர்ஸ் ஸ்விங் என்பது, பந்தை ஒருபுறம் மட்டும் தொடர்ந்து பாலிஷ் செய்து வீசுவது.
 
முகமது ஷமியின் பந்துவீச்சு முறை குறித்து விளையாட்டுத் துறையின் மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில் “ ஷமிக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸுக்கு அடுத்தாற்போல் அதிக விக்கெட்டுகளை போல்ட் மூலம் வீழ்த்தியுள்ளார்.
 
ரிவர்ஸ் ஸ்விங் என்பது, பந்தை ஒருபுறம் மட்டும் தொடர்ந்து பாலிஷ் செய்து வீசுவது. அதாவது பந்தின் சீம் பொஷிசன் அவுட் ஸ்விங் வீசுவதுபோல் பேட்டருக்கு தெரியும்.
 
ஆனால், பந்து பிட்ச் ஆனதும் பந்து இன்ஸ்விங் ஆகி உள்ளே வரும். ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலையாக பந்துவீச்சாளருக்கு இருந்தது. ஆனால் இப்போது இரு இன்னிங்ஸ்களுக்கு இரு பந்துகள் முறை வந்தபின் அது மறைந்து வருகிறது.
 
மோதி அரசின் கொள்கையால் அரபு நாடுகளில் பணிபுரியும் 90 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு வருமா?
 
இன்கட்டர்களை வீசுவதில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்யின் முன்னாள் வீரர் வேன்பன் ஹோல்டர் வல்லவர், தேர்ந்தவர்.
 
ஆனால் ஷமியை பொறுத்தவரை இன்கட்டரை கலையாக மாற்றிவிட்டார், அதாவது ஆஃப் கட்டரை வீசுகிறார். இந்த இன்கட்டர்களை வீசுவதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் வேன்பன் ஹோல்டர் வல்லவர், தேர்ந்தவர். அவருக்குப்பின், மைக்கேல் ஹோல்டிங் சிறப்பாக வீசுவார். 1983ஆம் ஆண்டு இந்திய பயணத்தில் மைக்கேல் ஹோல்டிங் 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இந்த கட்டர்களை கையில் எடுத்து, ஷமி இப்போது சிறப்பாக வீசுகிறார். தென் ஆப்பிரிக்காவின் யான்சென், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் வீசினாலும், ஷமி அளவுக்கு துல்லியத்தன்மை, லைன் லென்த்தில் யாரும் வீசுவதில்லை, நிலைத்தன்மையுடன் வீசுவதில்லை.
 
அதாவது லைன் லென்த்துக்கு இடைப்பட்ட இடத்தில் ஷமி பந்தை பிட்ச் செய்யும்போது, பேட்டர் பிரன்ட்புட் எடுத்து பேட் செய்ய வரும்போது, பந்து பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழக்கிறார்கள். இதுதான் ஷமியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.
 
சர்தார் வல்லபாய் படேல்: காந்தி படுகொலைக்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்.சை தேச பக்தர்கள் என்று பேசியது ஏன்?
 
ஷமியின் பந்துவீச்சு சில போட்டிகளாக ஆக்ரோஷத்துடன் இருக்கக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, “ஷர்துல் தாக்கூரை முன்நிறுத்தி சில போட்டிகளில் ஷமியை பெஞ்சில் அமர்த்தினார்கள். ஷமி போன்ற மிகுந்த அனுபவம் உள்ளவர்களை வாய்ப்பளிக்காமல் அமர்த்துவது தவறு.
 
ஆல்ரவுண்டர் தேவைக்காக ஷர்துல் தாக்கூரை பிளேயிங் லெவனில் எடுத்தாலும், 6 பேட்டர்கள் விளையாடாததை ஷமி விளையாடிவிடப் போகிறாரா.
 
ஷர்துல் தாக்கூரைவிட தான் எந்த அளவுக்கு சிறந்த பந்துவீச்சாளர், தனக்குரிய இடம் எப்போதும் நிரப்பப்படாமல் இருக்கும் என்பதை வெளிப்படுத்தவே ஷமியின் பந்துவீச்சில் சில போட்டிகளில் அனல் பறந்தது என்று நான் நினைக்கிறேன்,”எனவும் அவர் தெரிவித்தார்.
 
பாகிஸ்தானை முந்திய ஆப்கானிஸ்தான்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு புதிய சவால்
 
இந்திய அணியின் பந்துவீச்சு வலிமை குறித்து முத்துக்குமார் பிபிசி செய்திகளிடம் கூறுகையில், “இந்திய அணியின் பந்துவீச்சு மிரட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், அக்தர், ரசாக், அசார் முகமது எனப் பெரிய பட்டாளமே இருந்து மிரட்டியது. ஆஸ்திரேலியாவில் மெக்ராத், கில்லஸ்பி, பிளெம்மிங் என மிரட்டலான பந்துவீச்சு இருந்தது.
 
அதைப்போன்று இந்திய அணியில் வேகப்பந்துவீச்சில் எதிரணியை அச்சுறுத்தும் கூட்டணியாக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவும் உள்ளனர். பந்துவீச்சு வலிமையாக இருப்பதுதான் இந்திய பேட்டர்களால் ரிலாக்ஸாக பேட் செய்ய முடிகிறது. எனக்குத் தெரிந்தவரை ஜாகீர்கானுக்குப்பின், பேட்டர்களுக்கு எதிராக திட்டமிட்டு பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையானவர் ஷமி என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்