ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (20:52 IST)

இந்தியா செமி ஃபைனலில் ஜெயிச்சதுக்கு 100% அவர் தான் காரணம்- ரஜினிகாந்த்

supert star rajini
இந்தியாவில் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்றுகள் முடிவில், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் வெளியேறின.

இந்தியா, ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில் இந்தியா-   நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி நேற்று  நடைபெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண  முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரிச்சர்ட்ஸ், பிரபல நடிகர் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த், அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன்  ஆகியோர் இப்போட்டியை  நேரில் கண்டுகளித்தனர்.

இன்று மும்பையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அவரிடம் நேற்றைய போட்டி பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், முதலில் கொஞ்சம் டென்சன் ஆனேன். அதன்பின்னர், 2,3 விக்கெட்களுக்கு பிறகு ஒன்றரை மணி  நேரம் டென்சனாகத்தான் இருந்தது. ஆனால் 100 கோப்பை நமக்குத்தான். அரையிறுதியில் அணியின் வெற்றிக்கு 100 ஷமிதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.