வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:39 IST)

20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை பைனலில் இந்தியா vs ஆஸ்திரேலியா!

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் நியுசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி முதல ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்நிலையில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய ஆஸி அணி 7 விக்கெட்களை இழந்து போராடி இலக்கை எட்டியது.

இதன் மூலம் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மீண்டும் மோதுகின்றன. 2003 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்த நிலையில் அந்த தோல்விக்கு பழிக்கு பழி வாங்கும் போட்டியாக இந்த இறுதிப் போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.