ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:06 IST)

உத்தர பிரதேசத்தை உலுக்கும் ஓநாய்கள்! தாக்குதலில் இருந்து தப்பிக்க புதிய வழி!

wolf dog

உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் ஓநாய்கள் மனிதர்களை வேட்டையாடி வரும் நிலையில் அவற்றிடமிருந்து தப்பிக்க மக்கள் புதிய யுத்திகளை கையாள தொடங்கியுள்ளனர்.

 

 

உத்தர பிரதேசத்தில் உள்ள பாஹ்ரைச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில், ஓநாய்கள் கூட்டமாக புகுந்து மனிதர்களை வேட்டையாடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஓநாய்கள் தாக்குதலால் குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 30 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் ஓநாய்களை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும், முடியாத பட்சத்தில் சுட்டுக் கொல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் வேட்டை நடத்தி வந்த 6 ஓநாய்களில் 4 ஓநாய்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கபட்ட நிலையில் , 2 ஓநாய்கள் இன்னும் பிடிபடாமல் இருந்து வருகின்றன.

 

அவற்றை பிடிக்கும் வரை வீடில்லாதவர்கள், சரியான கதவு இல்லாத வீட்டில் வசிப்போர் பஞ்சாயத்து இல்லத்தில் வந்து தங்கிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இரு ஓநாய்களும் பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K