ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (11:01 IST)

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பள்ளி ஊழியர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பள்ளி ஊழியர் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேச மாநிலம் பரூகாபாத் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வருபவர்கள் அமித் மற்றும் அவரது நண்பர் பங்கஜ். அதேபகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியை கடத்திய அமித், பங்கஜ் ஆளிள்ளாத வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

அங்கு வைத்து சிறுமியின் வாயில் துணியை அடைத்து அமித் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். 

 

ஆனால் சில மாதங்களில் அந்த சிறுமியின் உடல்நிலை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் அவரை அவரது பெற்றோர் மருத்துவமனை அழைத்துச் சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி வாய் திறந்த நிலையில், போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ஆனால் இந்த வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிறுமியின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K