வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (09:14 IST)

மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்கள்! சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட முதல்வர்!

உத்தர பிரதேசத்தில் மனிதர்களை ஓநாய்கள் தொடர்ந்து வேட்டையாடி வரும் நிலையில் அவற்றை சுட்டுக் கொள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டத்தின் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஓநாய்கள் கூட்டமாக புகுந்து மனிதர்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் ஓநாய்களால் வேட்டையாடப்பட்டுள்ளனர். ஓநாய்கள் தாக்கியதில் 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் காட்டுப்பகுதிகளில் கூண்டுகளை அமைத்தும் அதனால் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் ஓநாய்களை சுட்டு பிடிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

முடிந்தளவு ஓநாய்களுக்கு மயக்க ஊசியை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அது முடியாத பட்சத்தில் அவற்றை சுட்டுக் கொல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K