சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (10:41 IST)

சொந்த மகனை கொன்று எதிர்வீட்டு எதிரியை பழிவாங்க திட்டம்! - கொடூர தகப்பன் சிக்கியது எப்படி?

உத்தர பிரதேசத்தில் எதிர்வீட்டுக்காரரை பழிவாங்க தனது சொந்த மகனையே தந்தை ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேச மாநிலம் சாஜஹான்பூரில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவரது மகன் கௌரவ் மனநிலை சரியில்லாதவர். சஞ்சீவின் எதிர்வீட்டில் விவேக் என்ற நபரும் அவரது மனைவி, மகன் ஆயுஷ் ஆகியோரும் வசித்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னதாக கௌரவ்வும், ஆயுஷும் விளையாடும்போது சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இதில் இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட விவேக்கின் மனைவி சஞ்சீவின் மனைவியை அடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு வீட்டாரிடையே பகை மூண்ட நிலையில் தனது மனைவியை அடித்த விவேக் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என சஞ்சீவ் திட்டமிட்டுள்ளார்.
 

 

இதற்காக தனது மனநலம் சரியில்லாத மகன் கௌரவ்வை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்ற சஞ்சீவ், அங்கிருந்த நதியில் தனது மகனை தள்ளிவிட்டு கொடூரமாக கொன்றுள்ளார். பின்னர் தனது மகனை காணாதது போல அனைத்து பகுதிகளிலும் தேடி சுற்றிவிட்டு காவல்நிலையத்தில் சென்று, விவேக் குடும்பத்தினர் தனது மகனை கடத்தி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

 

இதனால் விவேக் குடும்பத்தினர் மீது போலீஸ் சந்தேகம் திரும்பும்போது தனது மகனின் உடல் நதியில் கண்டெடுக்கப்பட்டால் அந்த கொலை பழி விவேக் குடும்பத்தின் மீது விழும் என கொடூரமாக திட்டமிட்டுள்ளார் சஞ்சீவ். ஆனால் போலீஸ் விசாரணையில் சந்தேகம் சஞ்சீவ் மீதே எழுந்துவிட்டது. அவர்கள் சஞ்சீவை டார்கெட் செய்து விசாரித்ததில் எதிர்வீட்டுக்காரர்களை போலீஸில் மாட்டிவிட தன் மகனை தானே கொன்றதை சஞ்சீவ் ஒத்துக் கொண்டுள்ளார். எதிர்வீட்டுக்காரர்களை பழிவாங்க சொந்த மகனையே கொன்ற கொடூர தந்தை குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K