1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (10:56 IST)

சொத்து விவரங்களை தரலைனா சம்பளம் கிடையாது! - அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர்!

அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால் இந்த மாத சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

 

 

உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் பல்வேறு புதிய சட்டங்களை, விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் விதித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் உத்தர பிரதேச அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

 

 

அரசு ஊழியர்கள் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்ப்பது குறித்து கண்டறியவும், நடவடிக்கை எடுக்கவும் இந்த உத்தரவு வெளியானதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தரவு வெளியானது முதல் தற்போது வரை மொத்த அரசு ஊழியர்களில் 26 சதவீதம் பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை சமர்பித்துள்ளனர்.

 

சுமார் 13 லட்சம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை அளிக்காமல் உள்ளனர். இதனால் சொத்து விவரங்களை அளிக்காத அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆகஸ்டு 31க்குள் சொத்து விவரங்களை அளிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K