1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. vattal nagaraj not supported today bandh

இன்று பெங்களூர் பந்த்: வாட்டாள் நாகராஜ் கோஷ்டி ஆதரவு தர மறுத்ததால் பரபரப்பு..!

பெங்களூரு
செப்டம்பர் 29-ந் தேதி பந்த் நடத்தும் வாட்டாள் நாகராஜ் கோஷ்டி இன்றைய  பெங்களூர் பந்த்-க்கு ஆதரவு தர மறுத்துள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 
பெங்களூர் பந்த்-க்கு ஆதரவு தெரிவித்த அமைப்புகள் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது
 
இன்று நடைபெறும் பெங்களூர் பந்த் போராட்டத்தில் ஓலா, ஊபர் டாக்சி சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர் சங்கம் ஆதரவு இல்லை என அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் இன்றைய பந்த் நாளில் விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்த குமார் தலைமையில் இன்று பேரணி நடைபெறும்
 
இன்றைய பெங்களூர் பந்த் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?