திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (10:25 IST)

சென்னையில் விடிய விடிய கனமழை: பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்..!

Flights
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்ததை அடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால்  உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. 
 
ஜெர்மனி டெல்லி கொல்கத்தா ஆகிய பகுதியிலிருந்து வந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. 
 
அதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கிளம்பும் எட்டு விமானங்கள் தாமதமாக கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலையத்தில் ரன்வேயில் இருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் தற்போது விமான நிலைய ஊழியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran