1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (10:07 IST)

சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பரப்பன அகராதார சிறையில் சசிகலா இருந்த போது அவர் சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது 
 
மேலும் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரின் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பெங்களூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
மேலும் இந்த வழக்கு அக்டோபர் ஐந்தாம் தேதிக்கு ஒத்துழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Mahendran