வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:59 IST)

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கூடாது: பெங்களூரில் பந்த் நடத்தும் கன்னட மக்கள்..!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் உள்பட பந்த் தினத்தில் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் வரும் 29ஆம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி நடத்தப்படும் இந்த முழு அடைப்புக்கு  முழு ஆதரவு கொடுக்க கன்னட மக்கள் முடிவு செய்தனர். 
 
அன்றைய தினத்தில் ஐடிஐ இந்நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என்றும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva