1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (17:11 IST)

நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு

தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த   நிலையில், அவர் மீது பாலியல் புகார்கள்  கடத்தல் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நித்யானந்தா , கைலாசா என்ற தனித் தீவில் தன் சிஷ்யர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அவர் சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ வெளியிடுவதில்லை. ஆனால், நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  நித்யானந்தா விவகாரம் தொடர்பாக இன்டர்போல் கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது. நித்யானந்தா விவகாரத்தில், கர்நாடக சிஐடி போலீசாரிடம் கூடுதல் விவரங்களை இன்டர்போல் போலீஸ் கேட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத  நித்யாந்னதாவுக்கு ராம்நகர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.