1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. vandhe bharath train door not opened

திடீரென திறக்காத ‘வந்தே பாரத்’ ரயில் கதவுகள்; பரிதவித்த பயணிகள்

vandhe bharath
வந்தே பாரத் ரயில்களின் கதவு திடீரென திறக்காததால் பயணிகள் பரிதவித்த காட்சி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவின் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இந்த ரயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஷீரடியில் இருந்து மும்பை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலின் கதவுகள் சமீபத்தில் தானே ரயில் நிலையத்தில் நின்றபோது கதவுகள் திறக்கவில்லை. பத்து நிமிடங்கள் ஆகியும் தானியங்கி கதவுகள் திறக்காததால் உள்ளே உள்ள பயணிகள் இறங்கவும், வெளியே உள்ள பயணிகள் ஏறவும் முடியாமல் தவித்தனர்.
 
இதனை அடுத்து உள்ளே உள்ள பயணிகள் கார்டு கேபின் வழியாக இறக்கி விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தானியங்கி கதவுகள் திறக்காததால் வந்தே பாரத் 13 நிமிடம் தாமதமாக இலக்கை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by siva
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பூகம்பத்திலிருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு! – துருக்கி அதிபர் தகவல்!