1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:34 IST)

2 கிமீ தூரத்திற்கு தண்டவாளங்களை திருடிய மர்ம நபர்கள்: அதிர்ச்சி சம்பவம்!

Train Track
பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தை திருடி சென்ற மர்ம நபர்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
பீகாரில் உள்ள பந்தோல் ரயில் நிலையம் என்ற பகுதியில் இருந்து லோகத் என்ற பகுதி வரையிலான தண்டவாளங்கள் திருடு போயிருப்பதாக தெரியவந்துள்ளது. திருடு போன ரயில் தண்டவாளர்களின் இரும்புகளின் மதிப்பு இலட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி பீகார் நகரில் கடந்த 19ஆம் தேதி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் மொபைல் கோபுரம் ஒன்றையும் திருடி சென்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மொபைல் கோபுரம் திருடு போனதை விசாரிக்க அதிகாரிகள் வந்த போது தான் ரயில் தண்டவாளமும் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது, இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
 
Edited by Mahendran