1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (19:32 IST)

வாட்ஸ் ஆப்-ல் இனிமேல் உணவுகள் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்

railway platform
இந்திய ரயில்வே துறையில் , வாட்ஸ் ஆப்-ல் இனிமேல்  உணவுகள் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும்  போக்குவரத்தாக இந்திய ரயில்வே துறை இயங்கி வருகிறது.

ரயில்வேதுறை பயணிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் அறிவித்து வரும் நிலையில், தற்போது, வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பினால் உடனே உணவு டெலிவரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

+91- 8750001323 என்ற எண்ணிற்கு பி.என்.ஆர் எண்ணைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பினால் ரயிலில் இருக்குமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று ரயில் பயணிகளுக்கு புதிய வசதியை ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.