திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (19:10 IST)

இன்று முதல் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்..!

vandhe
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளின் ஆதரவு அதிகரிப்பு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். 
 
மும்பை சோலாப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் 450 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்ய இருப்பதாகவும் இந்த தூரத்தை ஆறு மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மும்பை ஷீரடி நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களையும் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 
 
மும்பை சோலாப்பூர் இடையே பயண கட்டணம் ரூபாய் 1000 என்றும் மும்பை ஷீரடி இடையே பயண கட்டணம் ரூபாய் 840 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva