1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. UN selected india for UN Security association temperory member

ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா! – எட்டாவது முறையாக தேர்வு!

National
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினர்களில் எட்டாவது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. இதுத்தவிர பிராந்திய அடிப்படையில் தற்காலிக உறுப்பினராக இணைய மற்ற நாடுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா மட்டுமே போட்டியிட்டது.

பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகளை பெற்று ஐ.நா பாதுகாப்பு சபையின் தற்காலிக உறுப்பினராக 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு தொடங்கி இரு ஆண்டுகளுக்கு இந்தியா இந்த பதவியில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இனிமேல் ஒரு சீன பொருளையும் வாங்க கூடாது! – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!