சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவர் இடைநீக்கம் !

chennai kings
sinoj| Last Modified புதன், 17 ஜூன் 2020 (22:21 IST)

 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி  நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனாவில் தீவிரம் அதிகானதை அடுத்து இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.
 
அதேபோல் இம்மாதம் நடைபெற இருந்த ஜிம்பாவே, இலங்கை சுற்றுப்பயணத்தை பிசிசிஐ  கொரோனா காரணமாக ரத்து செய்தது.
 
இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் தொட்டபிளில்  மது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
தொட்டபிள் மது தனது டுவிட்டர் பக்கத்தில், 20 ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்துள்ளது குறித்து சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை அவர் பதிவிட்டிருந்த நிலையில், அக்கருத்து தவறான கருத்தை வெளிப்படுத்துவதாகவும் அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :