பல கோடி மோசடி செய்த பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு !
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜக பொதுச் செயலாளர் மோகித் கம்போத். இவர் அவியான் ஓவர் சீஸ் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.60 கோடி கடன் பெற்றுள்ளார்.
ஆனால் இக்கடனை அவர் 2015 ஆம் ஆண்டு வரை செலுத்தாததால் மோகித்தின் நிறுவனம் வராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோகித் வங்கியில் இருந்து பெற்ற கடனை நிறுவனத்தின் இயக்குநர் பெயரில் ஒரு பிளாட் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நிறுவனத்தின் இயக்குநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் வங்கிக்கு ரூ.67.22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேங்க் ஆப் இந்தியா சிபிஐக்கு புகார் அளித்தது. இப்புகாரை அடுத்து, மோஹித் கம்போஜ், அபிஷேக் கபூர், நரேஷ் கபூர், சித்தாந்த் பாக்லா , இர்தேஷ் மிஸ்ரா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.