தொடர்புடைய செய்திகள்
- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கேரண்டி கிடையாது.. சீன பொருட்கள் மாதிரி: அமித்ஷா கிண்டல்..!
- கே.சி.ஆரை டார்கெட் செய்து அடிக்கும் காங்., பாஜக! – தெலுங்கானாவில் தாக்கு பிடிக்குமா பிஆர்எஸ்?
- தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கிறதா பி.ஆர்.எஸ்? ஆட்சியை பிடிப்பது யார்?
- முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சிறையில் படுக்கை வசதி செய்து கொடுப்போம்: காங்கிரஸ்
- காங்கிரஸ் வெற்றி பெற பாடுபடுங்கள்: தொண்டர்களுக்கு திமுக அறிவுறுத்தல்..!
முஸ்லிம்களுக்கு தனியாக ஐடி பார்க் உருவாக்குவது சாத்தியமில்லை: டி.கே.சிவகுமார்
முஸ்லிம்களுக்கு தனி ஐடி பார்க் உருவாக்க போவதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்குவேன் என சாத்தியமில்லாத வாக்குறுதியை அவர் தந்திருக்கிறார் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்காக ஐடி பார்க் உருவாக்கப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை எப்படி சாத்தியமாகும் என்றும் சிறுபான்மையினருக்காக என்று தனியாக ஐடி பார்க்க அமைக்க முடியுமா என்றும் ஒட்டுமொத்த நாட்டில் இது போன்ற ஒரு கொள்கையை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் பிஆர்எஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும், முஸ்லிம் இளைஞர்களுக்கு தனியாக ஐடி பார்க் உருவாக்கப்படும், இந்த ஐடி பார்க் ஹைதராபாத் அருகே அமைக்கப்படும் என்றும் கே சி ஆர் கூறி இருந்தார்.
இந்த அறிவிப்புக்கு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
Edited by Siva
