1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Telungana state election poll result

தெலுங்கானாவில் ஆட்சியை இழக்கிறதா பி.ஆர்.எஸ்? ஆட்சியை பிடிப்பது யார்?

telungana
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த சந்திரசேகர ராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென அம்மாநிலத்தில் முடிவுகள் மாற இருப்பதாக கூறப்படுகிறது 
 
தெலுங்கானா சட்டசபை வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் 57 முதல் 62 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் பிஆர்எஸ் 41 முதல் 46 இடங்களை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே பிடிக்கும் என்றும் இதர கட்சிகள் ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என்று கூறியுள்ளது.  
 
இந்த கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் மூன்றாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது தான் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது உறுதியாக தெரியவரும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியர்கள் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதை நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி