1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (07:59 IST)

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கேரண்டி கிடையாது.. சீன பொருட்கள் மாதிரி: அமித்ஷா கிண்டல்..!

Amitshah
கட்சியின் எம்எல்ஏக்கள் சீன பொருட்கள் போல் கேரண்டி இல்லாதவர்கள் என தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது என்றும் பத்தாண்டு கால பிஆர்எஸ் ஆட்சியில் அவர்கள் செய்த ஊழலுக்கு எல்லையே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சீன பொருட்கள் போன்றவர்கள் என்றும் எந்தவித கரண்டியும் இல்லாதவர்கள் என்றும் தெரிவித்தார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டித் தருவதாகவும் கே.சிஆர் கூறியது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்

Edited by Siva