1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rs.2500 crore for cm post at karnataka

ரூ.2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி: பேரம் பேசிய இடைத்தரகர்

money
ரூபாய் 2500 கோடி கொடுத்தால் முதலமைச்சர் பதவி பெற்றுத் தருவேன் என இடைத்தரகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக கர்நாடக பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது அரசியலில் இடைத்தரகர்கள் அதிகமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் என்பவர் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசினார் 
 
அப்போது டெல்லியில் இருந்து ஒரு இடைத்தரகர் வந்ததாகவும் அவர் தன்னிடம் 2500 கோடி ரூபாய் தயாராக வைத்திருங்கள் உங்களை முதலமைச்சர் காட்டுகிறேன் என்று தெரிவித்ததாகவும் கூறினார் 
 
அதற்கு 2500 கோடி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் .வைராகும் புகைப்படம்