திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (16:56 IST)

புரோட்டா பார்சலில் பாம்பு தோல் .வைராகும் புகைப்படம்

snake
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெருமங்காடு என்ற பகுதில் ஒரு ஓட்டல் இயக்கி வருகிறது.

இந்த ஓட்டலில் பூவத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண் புரோட்டா வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்ற பின் அந்த புரோட்டா பார்சலை அவர் விரித்துப் பார்த்துள்ளார்.

அந்த  பார்சலைக் கட்டியிருந்த காகிதத்தில் பாம்பின் தோல் இருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் புகார் அளித்தார்.

அதிகாரிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்று ஆய்வு  நடத்தினர். அதில், உணவுப் பொருட்களை   வினியோகம் செய்வதில் அலட்சியமாகவும் பாதுகாப்பு கடைபிடிக்கவில்லை என கூறி   அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

பார்சலில் பாம்பு தோல் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.