செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (16:45 IST)

அறிவியல் பொய் சொல்லாது, மோடி தான் பொய் சொல்கிறார்: ராகுல் காந்தி

Rahul
அறிவியல் பொய் சொல்லாது என்றும் மோடி தான் பொய் சொல்கிறார் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் இந்தியாவில் 4.8 லட்சம் மக்கள் இறந்துள்ளதாக இந்திய அரசு கூறிய நிலையில் 47 லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 47 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்திய அரசு கூறியது போல் 4.8 லட்சம் அல்ல
 
அறிவியல் பொய் சொல்லாது, மோடிதான் பொய் சொல்கிறார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராகுல் காந்தி என்று கூறியுள்ளார். அவருடைய இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.