1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2025 (09:11 IST)

கைதான ஆர் சி பி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்!

கைதான ஆர் சி பி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன்!
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர்​சிபி அணி​யின் வணிக பிரிவு நிர்​வாகி நிக்​கோல் சோசலே, டிஎன்ஏ நிறு​வனத்​தின் துணை தலை​வர் சுனில் மேத்​யூ, வணி​கப்​பிரிவின் நிர்​வாகி கிரண், ஒருங்​கிணைப்பு நிர்​வாகி சுமந்த் ஆகியோரை பெங்களூர் போலீஸார் கைது செய்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் “கூட்ட நெரிசலுக்கு யார் காரணம் என்பது குறித்து இன்னும் அரசு விசாரணை நடத்தி முடிக்கவில்லை. அதற்குள் கைது நடவடிக்கை நடந்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் கைது நடந்துள்ளது. அதனால் நான்கு பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.