1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sv sekar scolding adhav arjuna for talking

லூசு பசங்களா?... அறிவு இருக்கா இல்லையா?!.. ஆதவ் அர்ஜுனாவை பொளக்கும் எஸ்.வி.சேகர்!..

adhav arjuna
விடுதலைச் சிறுத்தை கட்சிகயிலிருந்து விஜயின் தவெக கட்சிக்கு வந்தவர் ஆதவ் அர்ஜுனா.. லாட்டரி அதிபர் மார்ட்டீனின் மருமகன் இவர்., தவெக பொதுக்கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பேசும்போது திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் இவர்.

சமீபத்தில் கூட அரசியலுக்கு வர நினைத்த ரஜினிகாந்தை திமுக மிரட்டியது.. அதனால்தான் அவர் அரசியலுக்கு வரவில்லை என கொளுத்தி போட்டார்.. ஆதவ அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். ஒருபக்கம், திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினையும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்..

இந்நிலையில், எஸ்.வி.சேகர் வெளியிட்டவீடியோவில் ‘ஊழல் ஊழல்னு பேசுறீங்களே.. சைக்கிள்ல போன உங்க நிர்வாகிகள் எப்படி இப்ப கார்ல போறாங்க? எப்படி காசு வந்தது? என்ன மூட்டை தூக்கி சம்பாதிச்சாங்களா? என்ன பேசுறீங்க?.. பைத்தியக்கார கூட்டமா இருக்கீங்க.. வார்த்தைகளை அளந்து பேசுங்க.. மரியாதையா பேசுங்க.. முதலமைச்சர் அவ்வளவு கேவலமா பேசுறீங்க.. அறிவு இல்லையா உங்களுக்கு?..

எடப்பாடி பழனிச்சாமி  எதிகட்சி தலைவர்.. அவர் இப்படியா மரியாதை இல்லாம பேசுறாரு? உங்க வீட்ல இப்படியா உங்களை வளர்த்தாங்க.. ஒழுக்கமே இல்லாம வளர்ந்து இருக்கீங்க.. பெத்து போட்டு உங்க வீட்ல தூக்கி எறிஞ்சிட்டாங்க.. நீங்க தலைவனாகி மத்தவங்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி தர போறீங்களா.. அஜித் லெவலுக்கு உங்க தலைவரால வர முடியுமா?.. என்னோட சொத்து இன்டர்நெட்ல இருக்கு.. உங்க தலைவர் சொத்து கணக்கு சொல்ல முடியுமா?.. லூசு மாதிரி பேசக்கூடாது’ என பொங்கியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
காக்கா குஞ்சுக்கெல்லாம் பதில் சொல்ல வச்சிட்டீங்க!.. போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்!..