வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 6 ஜூன் 2025 (09:01 IST)

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

Chinnaswamy stampede

ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்சிபி அணி நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஐபிஎல் சீசனில் ஆர்சிபி வெற்றி பெற்றதை தொடர்ந்து வெற்றி கொண்டாட்ட விழா பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்த நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலியானவர்கள் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ.10 லட்சமும், ஆர்சிபி அணி ரூ.10 லட்சமும் நிவாரணமாக அறிவித்திருந்தது.

 

இதுகுறித்து போலீஸார் ஆர்சிபி அணி மீதும், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது கூட்ட நெரிசல் பலி குறித்த விசாரணையில் ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலேவை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் ஆகியோரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

18 ஆண்டுகளாக போராடி ஆர்சிபி வெற்றிப்பெற்ற போதிலும் 11 பேர் பலி விவகாரத்தால் ஆர்சிபியின் கொண்டாட்டம் நீர்த்து போனது.

 

Edit by Prasanth.K