1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chinnaswamy stadium loses scheduled International match

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

IPL 2025
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விடலாமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பின்பகுதியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த ஒரு நாள் போட்டிகள் உள்பட மூன்று போட்டிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 
அடுத்த கட்டுரையில்
RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!