1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Sunil Gavaskar talked about RCB fans over joy over ipl win

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

IPL 2025
18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விடலாமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “ஆர் சி பி அணி முன்பே கோப்பையை வென்றிருந்தால் இப்படி ரசிகர்கள் அதீத உணர்ச்சிப் பெருக்கோடு இருந்திருக்க மாட்டார்கள். மற்ற அணிகள் கோப்பை வென்ற போது கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. ஈ சாலா கப் நம்தே என்ற வாசகம் அந்த அணியின் கழுத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. அதனால் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும் என ரசிகர்கள் நினைத்தனர்.  இந்த துயர சம்பவத்தில் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இன் இரங்கல்கள்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!