1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi says about BJP and RSs

அனைத்துத் துறைகளையுமே ஆர்எஸ்எஸ் தான் நடத்துகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

ஆர்.எஸ்.எஸ்
இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளையும் ஆர்எஸ்எஸ்  தான் நடத்துகிறது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார் 
 
லடாக் பகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது பாஜக கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ் தான் நாட்டின் அனைத்து துறைகளையும் நடத்துகிறது என்ற குற்றம் சாட்டினார். 
 
ஒவ்வொரு துறைகளிலும் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்கள் தான் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்றும் மதிய அமைச்சர்கள் தங்கள் துறையை வழிநடத்த வில்லை என்றும் ஆர்எஸ்எஸ் சார்புடைய அதிகாரிகள் தான் வழி நடத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
 அரசு கட்டமைப்புகளில் ஆர்எஸ்எஸ்  மற்றும் பாஜக தங்கள் ஆட்களை முக்கிய பொறுப்பில் வைத்து அனைத்தையும் சிதைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!