தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் பெங்களூர் பயணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு தனித்தனியே கோஷ்டியும் உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை டெல்லி தலைமை நியமித்தது.
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்று ஐந்து ஆண்டுள் ஆகியுள்ள நிலையில், அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால், புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
எனவே, புதிய காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரியே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்கவுள்ளனர்.
இதற்ககாக, 11 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்களுடன் தமிழக மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் கார்கேவை சந்திக்க பெங்களூருக்குப் பயணம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.