செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (14:04 IST)

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் பகுதியில் பைக் சவாரி: வைரல் புகைப்பம்..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள நிலையில் லே என்ற பகுதியில் இருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். 
 
பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து ராகுல் காந்தி எம்பி பைக்கில் சவாரி செய்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டர்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran