1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (07:43 IST)

மாமன்னன் படத்துல அந்த ஒரு காட்சி… வடிவேலுவின் நடிப்பை புகழ்ந்த ஏ ஆர் ரஹ்மான்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படம் நேற்று ஐம்பதாவது நாளைக் கடந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாமன்னன் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ ஆர் ரஹ்மான் “30 ஆண்டுகளாக எனக்குள் இருந்த ஆதங்கம்தான் இந்த படம். நான் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்ததுதான் இந்த படம். அதைப்பற்றி இசையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அப்படி செய்பவர்களோடு சேர்ந்துகொண்டேன்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு பைக்கில் உதயநிதி பின்னால் அமர்ந்து செல்வார். அப்போது அவர் கண்ணில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்து அசந்துவிட்டேன். அப்போதே இந்த படத்துக்கு வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்தேன்” எனக் கூறியுள்ளார்.