செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (16:23 IST)

கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!

கொசு விரட்டும் லிக்விட் இயந்திரத்தால் ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த  உடையார் என்பவர் தனது வீட்டில் கொசு அதிகமாக இருப்பதால் கொசுவிரட்டும் லிக்யூட் இயந்திரத்தை பயன்படுத்தினார் 
 
 இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென  கொசு விரட்டும் லிக்யூட் இயந்திரத்தில் தீப்பிடித்து புகையானது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தபோது தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோது மூன்று சிறுமிகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. 
 
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran