தொடர்புடைய செய்திகள்
- பிச்சையெடுத்து கோயிலுக்கு 8 லட்சம் நன்கொடை வழங்கிய முதியவர்..
- சிவனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதா? ஐ.ஆர்.டி.சி. என்ன சொல்கிறது??
- சமஸ்கிரதத்தை பிரபலப்படுத்த மத்திய அரசு செலவு செய்தது இவ்வளவா??
- டெல்லியில் ராமராஜ்ஜியத்தை கொண்டு வந்துள்ளார் கெஜ்ரிவால்; சிவசேனா
- பட்ஜெட்டில் அறிவிக்காததும் நடக்கும்; நிர்மலா சீதாராமன் அதிரடி
”100 நாட்களில் 1 கோடி பேரை சந்திக்கிறேன்”; பிரஷாந்த் கிஷோரின் திட்டம் என்ன?
பீகார் போதுமான வளர்ச்சியை பெறவில்லை என குற்றம் சாட்டும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், இது குறித்து 100 நாட்களில் 1 கோடி பேரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
2005-2015 இடைப்பட்ட காலத்தில் பீகார் மாநிலம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், போதுமான வளர்ச்சி பெறவில்லை என குற்றம் சாட்டும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், வருகிற 20 ஆம் தேதி இது குறித்து பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாகவும், 100 நாட்களில் 1 கோடி பேரை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரஷாந்த் கிஷோர், “நிதிஷ் குமார், காந்தியின் கொள்கைகளை கைவிடக் கூடாது என பேசி வந்தார். ஆனால் தற்போது பாஜகவுடனான கூட்டணிக்காக கோட்சே குறித்து மென்மையான போக்கை கடைபிடிக்க வருகிறார்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
வருகிற அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு பிரஷாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
