திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:06 IST)

இஸ்லாமியர்களின் முற்றுகை போராட்டத்திற்கு தடை..

இஸ்லாமிய அமைப்பினர் நாளை அறிவித்திருந்த சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், சட்டமன்ற முற்றுகை போராட்டம் நாளை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி பெற விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் மார்ச் 11 ஆம் தேதி வரை சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். எனினும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.