திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (17:34 IST)

பிச்சையெடுத்து கோயிலுக்கு 8 லட்சம் நன்கொடை வழங்கிய முதியவர்..

ஆந்திராவில் முதியவர் ஒருவர் சுமார் 8 லட்சம் வரை பிச்சையெடுத்து சாய் பாபா கோயிலுக்கு நன்கொடை வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா விஜயவாடாவில் 73 வயது மதிக்கத்தக்க முதியவரான யதிரெட்டி என்பவர் 40 ஆண்டுகளாக ரிக்‌ஷா ஒட்டி வந்தார். பின்பு வயது முதிர்வு காரணமாக பிச்சையெடுத்து சிறுக சிறுக சேமித்து, 1 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், தனக்கு கிடைக்கின்ற அனைத்தையும் தானம் தருவதாக பிரார்த்தனை செய்த அவர், சுமார் 8 லட்சம் வரை சேமித்து சாய்பாபா கோவில் மற்றும் கோசாலை அமைப்பதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிச்சையெடுத்தே 8 லட்சம் வரை சேமித்த யதி ரெட்டி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.