திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (09:02 IST)

டெல்லியில் ராமராஜ்ஜியத்தை கொண்டு வந்துள்ளார் கெஜ்ரிவால்; சிவசேனா

அனுமனை வழிபடும் கெஜ்ரிவால் டெல்லியில் ராமராஜ்ஜியத்தை கொண்டு வந்துள்ளார் என சிவசேனா நாளிதழில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பானமையுடம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பாஜக 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இந்நிலையில் சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் இது குறித்து அந்நாளிதழின் எடிட்டர் சஞ்சய் ராவத், ”மதமில்லாமல் எந்த தேசமும் இல்லை. ஆனால் மதம் என்பது தேசபக்தியும் அல்ல. டெல்லி தேர்தலில் பாஜக கடவுள் ராமரை முன்னிறுத்திமாலும், அனுமனை வழிபடும் கெஜ்ரிவால், ராமராஜ்ஜியத்தை டெல்லியில் கொண்டு வந்துள்ளார். டெல்லியில் அனுமனுக்கு வலிமையாக ராமர் பின்னால் நின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”மேடியும் அமித்ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதையே டெல்லி தேர்தல் உணர்த்தியுள்ளது” எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.